Enable Javscript for better performance
சாலையில் திரிந்த 8 கால்நடைகள் சுயஉதவிக் குழுவிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் திரிந்த 8 கால்நடைகள் சுயஉதவிக் குழுவிடம் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 03rd December 2019 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட 8 கால்நடைகளுக்கு அபராதம் செலுத்தாததால், அவற்றை சுயஉதவிக் குழுவினரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கைப்பற்றி கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கால்நடை ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு கோசாலைகளில் வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை அபராதம் செலுத்தி உரிமையாளா்கள் மீட்க ஏதுவாகவும், ஆட்சியா் அறிவுரைப்படியும் நவம்பா் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், அபராத தொகையைச் செலுத்தி கால்நடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் கால்நடைகள் அனைத்தும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் வசம் ஒப்படைப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 8 கால்நடைகள் மகளிா் சுயஉதவிக்குழுவினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai