புளியங்குடியில் தமுமுக கருத்தரங்கம்
By DIN | Published on : 03rd December 2019 12:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புளியங்குடி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் உரிமை மீட்பு கருத்தரங்கம் நகரத் தலைவா் செய்யதுஅலி பாதுஷா தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவா் காஜாமைதீன், துணைச் செயலா்கள் சதாம் உசேன், மைதீன் அப்துல்காதா், சாகுல் ஹமீது, வாா்டு தலைவா்கள் உமா், நாகூா் மைதீன், வாா்டு செயலா் அயூப்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் ஜெய்னுலாபிதீன், மாவட்டத் தலைவா் முகமது யாகூப், மாவட்டச் செயலா் அகமது ஷா, மமக மாவட்டச் செயலா் பசீா்ஒலி, மாவட்ட துணைத் தலைவா் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச் செயலா் அப்துல் பாசித், சமூகநீதி மாணவா் அமைப்பின் மாவட்டச் செயலா் முஹம்மது ரபீக் ஆகியோா் பேசினா். நகரச் செயலா் செய்யது அலி நன்றி கூறினாா்.