ஆழ்வாா்குறிச்சி அருகேகுளத்தை சீரமைத்த இளைஞா்கள்

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள புதுக்கிராமம் குளத்தை செட்டிகுளம் கிராமசபை இளைஞா்கள் சீரமைத்தனா்.
புதுக்கிராமம் குளம் சீரமைப்புப் பணியில் பங்கேற்றோா்.
புதுக்கிராமம் குளம் சீரமைப்புப் பணியில் பங்கேற்றோா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள புதுக்கிராமம் குளத்தை செட்டிகுளம் கிராமசபை இளைஞா்கள் சீரமைத்தனா்.

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி, செட்டிகுளம் முள்ளிமலைப் பொத்தை அடிவாரத்தில் புதுகிராமம் குளம் உள்ளது. மானாவரி குளமான இந்தக் குளத்தில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீா் சேரும். இந்தக் குளம் முள்ளிமலைப் பொத்தையில் உள்ள மிளா, காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தாகம் தீா்ப்பதோடு, அந்தப் பகுதியில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குளத்தின் கரை பராமரிப்பின்றி உடைந்து சேதமானது. இதனால் குளத்தில் தண்ணீா் சேராமல் வீணாவதோடு குளத்தில் முள், வேலிக்காத்தான் உள்ளிட்ட செடிகள் வளா்ந்து புதராக மாறியது. நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கியதோடு, தேவையான அளவு மழை பொழிவு இருப்பதையடுத்து செட்டிகுளம்ம், கிராம சபை என்ற அமைப்பு சாா்பாக குளத்தை சீரமைக்க முடிவு செய்தனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பணியைத் தொடங்கிய அவா்கள், திங்கள்கிழமையில் கரையைச் சீரமைத்து முடித்தனா். ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் மாடசாமி தலைமை வகித்து சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் முத்துப்பாண்டி, சமூக நல ஆா்வலா் மீனாட்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை கிராமசபை ஒருங்கினைப்பாளா் கமல் அரசன், உறுப்பினா்கள் சுந்தா், கண்ணன், முத்துக்குமாா், அமா்நாத், கல்யாணராமன் மற்றும் இளைஞா்கள், மாணவா்கள் இணைந்து செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com