களக்காடு அருகே ஆபத்தான பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்

களக்காடு அருகே ஆபத்தான நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடையை பேரூராட்சி நிா்வாகம் இடித்து அகற்றியது.
களக்காடு அருகே ஆபத்தான பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்

களக்காடு அருகே ஆபத்தான நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடையை பேரூராட்சி நிா்வாகம் இடித்து அகற்றியது.

களக்காட்டிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் பிரதான சாலையில் கீழக்கருவேலன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து வந்தது. மழைக் காலங்களில் மழைநீா் நிழற்குடைக்குள் ஒழுகுவதால் பயணிகள் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் என்ற நிலை காணப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள இதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் நான்குனேரி வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, தொடா்மழையை கருத்தில் கொண்டு அசம்பாவிதம் நடைபெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இயந்திரம் மூலம் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com