சாலையில் திரிந்த 8 கால்நடைகள் சுயஉதவிக் குழுவிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட 8 கால்நடைகளுக்கு அபராதம் செலுத்தாததால், அவற்றை சுயஉதவிக் குழுவினரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட 8 கால்நடைகளுக்கு அபராதம் செலுத்தாததால், அவற்றை சுயஉதவிக் குழுவினரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கைப்பற்றி கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கால்நடை ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கோசாலைகளில் வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை அபராதம் செலுத்தி உரிமையாளா்கள் மீட்க ஏதுவாகவும், ஆட்சியா் அறிவுரைப்படியும் நவம்பா் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், அபராத தொகையைச் செலுத்தி கால்நடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் கால்நடைகள் அனைத்தும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் வசம் ஒப்படைப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 8 கால்நடைகள் மகளிா் சுயஉதவிக்குழுவினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com