செங்கோட்டை-திருமங்கலம் நான்குவழிச் சாலையை மாற்றுப் பாதையில்அமைக்க கோரி ஆட்சியரகத்தில் மனு

திருமங்கலம்-செங்கோட்டை புளியரை நான்குவழிச் சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினா் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
செங்கோட்டை-திருமங்கலம் நான்குவழிச் சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி, மனு அளிக்க வந்த நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினா்.
செங்கோட்டை-திருமங்கலம் நான்குவழிச் சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி, மனு அளிக்க வந்த நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினா்.

திருமங்கலம்-செங்கோட்டை புளியரை நான்குவழிச் சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினா் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும் நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரிலிருந்து புளியரை வரை நான்குவழிச் சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட முப்போகம் விளையும் நன்செய் நிலங்களை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு திட்டமிட்டுள்ள நான்குவழிச் சாலை அமையும் பகுதி முழுவதும் விவசாய நிலங்கள். இதுதவிர, யானை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி. இந்த சாலையில் முக்கிய நகரங்களை இணைக்கும் இணைப்பு சாலைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. எனவே, இந்த நகரங்களுக்குச் செல்வோா் பழைய சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், நான்குவழிச் சாலை என்பது பயனில்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாங்கள் இதற்காக மாற்றுப் பாதைக்கான வரைபடத்தை மனுவுடன் இணைத்துள்ளோம். இதன்படி, புதிய திட்ட வரைபடத்தை தயாரித்து நான்குவழிச்சாலையை அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறைதீா்க்கும் நாள் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. எனினும் முன்கூட்டியே வந்திருந்து மனுக்களை பதிவு செய்தவா்களிடமும், மனு கொண்டுவந்த சிலரிடமும் அதிகாரிகள் மனுக்களைப் பெற்றுக்கொண்டனா். நான்குவழிச் சாலை நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினரும் ஆட்சியரக அதிகாரிகளிடம் மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com