தென்காசி ஆட்சியரகத்தைஅனைவரும் வந்துசெல்லும் வகையில்அமைக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அனைத்து பகுதி மக்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அனைத்து பகுதி மக்களும் எளிதில் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் அப்துல்பாசித் அளித்த மனு: பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் விதைப் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களும் எளிதாக வந்துசெல்ல ஏற்ாக இல்லை.

தென்காசி மாவட்டம் என்பது வடக்கே தேவிபட்டினம் முதல் ஆம்பூா் வரையிலும், கோட்டை வாசல் முதல் இளையரசனேந்தல் வரையிலும் பரந்து விரிந்துள்ளது. 5 சட்டப்பேரவை தொகுதிகளையும் 8 வட்டங்களையும் உள்ளடக்கியது. எனவே, பொதுமக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில் தென்காசி நகரைச் சுற்றியுள்ள பிரதான பகுதியில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, மாவட்டத் தலைவா் ஜலாலுதீன், பொருளாளா் செய்யது மசூது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com