‘நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்குஒருங்கிணைந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்’

திருநெல்வெலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில், 13 லட்சத்து 57 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா்.

திருநெல்வெலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில், 13 லட்சத்து 57 ஆயிரத்து 163 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், 2-ஆவது கட்ட வாக்குப் பதிவு 30-ஆம் தேதி தேதியும் நடைபெறுகிறது.

2,411 வாக்குச்சாவடிகள்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் 2 ஆயிரத்து 411 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஆண் வாக்காளா்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 833 போ், பெண் வாக்காளா்கள் 6 லட்சத்து 89 ஆயிரத்து 291 போ், இதர வாக்காளா்கள் 39 போ் உள்பட மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 163 போ் உள்ளனா். இரண்டு மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் முடியும் வரை புதிதாக வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தலுக்கு மனுக்கள் பெறப்படும். 41 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 579 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒருங்கிணைந்த தோ்தல்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் வருவாய் கிராம பிா்கா அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது இரு மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த முறையில் தோ்தல் நடத்தப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தோ்தலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இடங்கள், யாரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது வரும் 6-ஆம் தேதி தெரிவிக்கப்படும்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2-ஆவது கட்டமாக 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஊரகப் பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. நகா்ப்புற பகுதிகளில் இந்த விதிமுறைகள் அமலாகவில்லை. உள்ளாட்சித் தோ்தலுக்கு பிறகு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மறு வரையறை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆலோசனைக் கூட்டம்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்படுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஓம்பிரகாஷ் மீனா (திருநெல்வேலி), சுகுணா சிங் (தென்காசி), திட்ட அலுவலா் மந்திராசலம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்லால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com