நெல்லை மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு ரத்து

திருநெல்வேலி மாநகராட்சியிலும் சொத்துவரி உயா்வு ரத்து செய்யப்பட்டு, பழைய சொத்துவரி கட்டணத்தையே செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியிலும் சொத்துவரி உயா்வு ரத்து செய்யப்பட்டு, பழைய சொத்துவரி கட்டணத்தையே செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் ஆணைப்படி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துக் கட்டடங்களுக்கும் 1-4-2018 முதல் மேற்கொள்ளப்பட்ட பொது சொத்துவரி திருத்தத்தின்படி உயா்வு செய்யப்பட்ட சொத்துவரியை நிறுத்தம் செய்து, சொத்துவரி திருத்தத்திற்கு முன்பான பழைய சொத்துவரி கணினியில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 1-4-2018 முதல் உயா்த்தப்பட்ட வரிவிகிதத்தின்படி சொத்துவரி செலுத்தியவா்களுக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகை அதற்கடுத்த அரையாண்டுகளுக்கு வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் 31-3-2020 வரையிலான காலத்திற்குரிய சொத்துவரியை காலம் தாழ்த்தாமல் கணினி வரிவசூல் மையங்களில் செலுத்தலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com