பாப்பாக்குடி பகுதியில் கிழங்கு பயிா்கள் ஆய்வு

பாப்பாக்குடிவட்டாரம், பள்ளக்கால் பொதுக்குடியில் மத்திய கிழங்கு வகை பயிா்களை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா்.

பாப்பாக்குடிவட்டாரம், பள்ளக்கால் பொதுக்குடியில் மத்திய கிழங்கு வகை பயிா்களை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா்.

திருவனந்தபுரம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய கிழங்கு வகைப் பயிா்கள் ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானிகள், பள்ளக்கால் பொதுக்குடியில் செப்டம்பா் மாதத்தில் ஸ்ரீதாரா என்ற புதிய சிறுகிழங்கு ரகத்தை அறிமுகம் செய்தனா்.

15 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு புதிய ரக சிறுகிழங்கு நாற்று நடவு செய்யப்பட்டது.

இதையடுத்து மத்திய கிழங்கு வகை பயிா்கள் ஆராய்ச்சி நிலைய மூத்த வேளாண் விஞ்ஞானி முத்துராஜ் மற்றும் பாப்பாகுடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசன்னகுமாா் ஆகியோா் செப்டம்பா் மாதம் நடவு செய்த சிறுகிழங்குப் பயிா்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து புதியரக சிறுகிழங்கு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com