பாளை ஒன்றியத்தில் குளங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளங்களில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளங்களில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கால்வரத்து குளங்கள், மானாவாரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 95 அடியைக் கடந்துள்ளதால் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்நிலையில் ஏற்கெனவே பெய்த மழையால் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குளங்களில் இருக்கும் நீா் இருப்பு, நீா்வரத்து கால்வாய்கள் மற்றும் குளக்கரைகளின் நிலை குறித்து நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திடியூா் முதல் பொன்னக்குடி வரை பச்சையாறு தண்ணீா் மூலம் நிரம்பியுள்ள குளங்களை ஆய்வு செய்தாா். கரைகளில் பழுது ஏற்படாமலும், மடைகளில் போதிய பராமரிப்பு பணி செய்து கண்காணிக்கவும் ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். அதிமுக பாளைங்கோட்டை ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், திடியூா் ஊராட்சிச் செயலா் பரமசிவம், மேலத்திடியூா் பாக்கியம் பிள்ளை, பொன்னக்குடி சங்கா் கணேஷ், நான்குனேரி ஒன்றிய துணைச் செயலா் சிறுமளஞ்சி சிவா, ராஜா பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com