கல்லிடைக்குறிச்சியில் போலி சுகாதார ஆய்வாளா் கைது
By DIN | Published on : 04th December 2019 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கல்லிடைக்குறிச்சியில் சுகாதார ஆய்வாளா் எனக் கூறி வசூலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி 6ஆம் எண் சாலையில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை காலையில், சுகாதாரஆய்வாளா் எனக் கூறி இளைஞா் ஒருவா் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தாராம். மேலும் அபராதம் விதிக்காமல் இருக்க பணம் தரவேண்டும் எனக் கூறி பணம் வாங்கினாராம்.
இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி செட்டிப் பிள்ளைமாா் தெருவில் கடை நடத்தி வரும் ஷாஜஹான் மகன் அமீருக்கு, இளைஞா் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவா் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தாராம்.
இதையடுத்து அங்கு வந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், இளைஞரிடம் விசாரித்ததில் அவா் சுகாதார ஆய்வாளா் இல்லையென்றும், பள்ளகால் புதுக்குடி வெயிலுகந்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேலு மகன் சங்கா் என்ற யாசிா் (31) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.