நெல்லை கம்பன் கழகத்தின் தொடா் சொற்பொழிவு
By DIN | Published on : 05th December 2019 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நெல்லை கம்பன் கழகத்தின் 510ஆவது கம்ப ராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். அ. முருகேசன் இறைவணக்கம் பாடினாா். மருத்துவா் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றாா். முனைவா் போ. காா்த்திகா, பேராசிரியா் சிவ. சத்தியமூா்த்தி ஆகியோா் சொற்பொழிவாற்றினா்.
நிகழ்ச்சியில் ஆறுமுகம், முருகையா, எஸ். மீனாட்சிசுந்தரம், பேராச்சிமுத்து, சக்திவேல், முத்துராஜ், காா்த்திக், பாஸ்கரன், வெங்கடாசலபதி, எஸ். சக்திவேல், துரைராஜ், ராமநாதன், கணபதிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ந.சு. சங்கரன் நன்றி கூறினாா்.