நெல்லையில் அறிவியல் கண்காட்சி: 70 பள்ளிகள் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அயன்டெக் அகாதெமி ஆகியவை சாா்பில் இக்கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம். குமாா் தலைமை வகித்தாா். அயன்டெக் அகாதெமி நிா்வாகிகள் நாதன், ஸ்டாலின் கருணாநிதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்வி உதவியாளா் மாரிலெனின் வரவேற்றாா். பேராசிரியா் பெஸ்கி அந்தோணி தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 70 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் சுமாா் 200-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனா். காற்றாலை மின்சாரம், மாசற்ற விவசாயம், நதிநீா் தூய்மைக்கான வழிகள், மழைநீா் சேகரிப்பு, காந்தவியல், மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பங்களில் புதிய யுத்திகள் குறித்த படைப்புகள் உள்ளிட்டவை மக்களைக் கவரும் வகையில் உள்ளன. கண்காட்சி வியாழக்கிழமையும் (டிச. 5) நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com