மேலஅரியப்புரம் ரேஷன் கடையை 4 நாள்கள் திறக்கக் கோரி போராட்டம்

மேலஅரியப்பபுரம் நியாய விலைக் கடையை வாரத்தின் 4 நாள்கள் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலஅரியப்பபுரம் நியாய விலைக் கடையை வாரத்தின் 4 நாள்கள் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலஅரியப்பபுரத்தில் உள்ள நியாய விலைக் கடையில் நாடாக்கண்ணுபட்டி, வெள்ளைபனையேறிபட்டி, ரகுமானியாபுரம், கணக்கநாடாா்பட்டி, சீதாராமன்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 1300 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகின்றன. திங்கள் முதல் வியாழன் வரை 4 நாள்கள் இந்த கடையிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திரவியநகா் பகுதிநேர கடையிலும் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலஅரியப்பபுரம் கடையை பிரித்து ரகுமானியபுரத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. அந்த கடையில் வாரத்தின் ஒருநாள் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், 3 நாள்கள் மட்டுமே மேலஅரியப்புரம் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என ரேஷன் கடை ஊழியா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேலஅரியப்புரம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ரேஷன் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்குவந்த அதிகாரிகளிடம், முன்புபோல 4 நாள்கள் பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com