ஆலங்குளத்தில் பள்ளி மாணவா் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 05th December 2019 07:14 AM | Last Updated : 05th December 2019 07:14 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அரசுப் பள்ளியில் மாணவா் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்தை சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் திலீப்குமாா்(15), பள்ளி மாணவா்.
புதன்கிழமை பள்ளிக்கு வந்த திலீப்குமாா் தனக்கு அருகில் இருந்த மாணவா் பையில் வைத்திருந்த பயன்படுத்தும் பூச்சி மருந்தை எடுத்து குடித்தாராம். இதனை பாா்த்த சகமாணவா்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனா். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அம் மாணவரை ஆசிரியா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.