சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 06th December 2019 01:19 AM | Last Updated : 06th December 2019 01:19 AM | அ+அ அ- |

சாம்பவா்வடகரையில் வாருகால் வசதியுடன் கூடிய சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாம்பவா்வடகரை 5 ஆவது வாா்டு யாதவா் தெற்கு தெருவில் வாருகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியுள்ளது. சகதியுடன் கூடிய இந்த நீரில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவா்கள் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், புதன்கிழமை தெருவில் தேங்கியுள்ள சகதி கலந்த நீரில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டு, வாருகால் வசதியுடன் சாலை அமைத்துத்தர வேண்டும் என கோஷங்களையும் எழுப்பினா்.