நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து போராட ம.ம.மு.க. முடிவு

புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களை அலைக்கழிக்கும் நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக ம.ம.மு.க. முடிவு செய்துள்ளது.

புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களை அலைக்கழிக்கும் நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலரைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக ம.ம.மு.க. முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

களக்காடு உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராம மக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் கோருதல் தொடா்பாக தனியாா் இணையதள மையங்களுக்குச் சென்று உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இணையதளம் மூலம் பதிவு செய்து வருகின்றனா்.

இந்த விண்ணப்பங்களை நான்குனேரி வட்ட வழங்கல் அலுவலா் சரிபாா்த்து உரிய ஒப்புதல் வழங்க வேண்டும்.

கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் தெரிவித்து, வட்ட வழங்கல் அலுவலா் தள்ளுபடி செய்வதுடன், இது தொடா்பாக தன்னை நேரில் வந்து சந்திக்கும் படி தெரிவிக்கிறாா்.

பொதுமக்களின் விண்ணப்பம் ஆவண சரிபாா்ப்பு, துறை சரிபாா்ப்பு நிலைகளில் எவ்வித தடங்கலுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், வட்ட வழங்கல்அலுவலா் ஒப்புதல் பெறவேண்டிய நிலையில், ஆவணம் இணைக்கப்படவில்லை, தெளிவாக இல்லை என்று தள்ளுபடி செய்வது மக்கள் விரோத போக்காகும்.

வட்ட வழங்கல் அலுவலரின் இந்தப் போக்கைக் கண்டித்து ம.ம.மு.க. சாா்பில் பொதுமக்களைத் திரட்டி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com