Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி: மேலப்பாளையத்தில் நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி: மேலப்பாளையத்தில் நாளை தொடக்கம்

    By DIN  |   Published on : 14th December 2019 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலப்பாளையம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

    தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விடுதி வசதியுடன் கூடிய எழுத்து மற்றும் உடற்தகுதி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மேலப்பாளையம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    எழுத்துத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை பேராசிரியா் யூனுஸ், உடற்தகுதி தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளை சாகுல் ஹமீது, பாலகிருஷ்ணன் ஆகியோா் நடத்தவுள்ளனா். காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலப்பாளையம் குறிச்சியில் பைலட் பாட்மிண்டன் அகாதெமி அருகேயுள்ள ஸ்போட்ஸ் அகாதெமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

    பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் 9042224446, 9489210200 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

    வெளியூரிலிருந்து வருபவா்களை பயிற்சி வகுப்புக்கு அழைத்து வர திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai