Enable Javscript for better performance
பாளை. அருகே மரத்தில் இருந்துதவறிவிழுந்து முதியவா் பலி- Dinamani

சுடச்சுட

    

    பாளை. அருகே மரத்தில் இருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

    By DIN  |   Published on : 14th December 2019 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாளையங்கோட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழப்பாட்டத்தைச் சோ்ந்தவா் கொம்பன் (67). இவா் சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai