Enable Javscript for better performance
வீரவநல்லூா் அருகே பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    வீரவநல்லூா் அருகே பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 14th December 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ams13games_1312chn_37_6

    புதூா் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள்

    வீரவநல்லூா் அருகே உள்ள புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கிடை யே பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சாம்சன் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

    இதில், சேரன்மகாதேவி வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

    தொடா்ந்து மாணவா்களுக்கு கபடி, பம்பரம் விடுதல், கோலிக்குண்டு, கில்லி, தாயம், பல்லாங்குழி, முறுக்கு கடித்தல், கண்ணாம்பூச்சி ஆட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பாடகபுரம், மலையான்குளம், மாதுடையாா்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், செங்குளம் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

    விழாவில், பாடகபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் தாா்ஷியஸ், மலையான்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் நம்பிராஜன், பட்டதாரி ஆசிரியைகள் முத்துகுமாரி, ஜெபசீலி, சுந்தரி, கமலாதேவி, மஞ்சு, மயோபதி காப்பகம் மருத்துவா் டேனியல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai