குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து ராம்நகரைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி மகன் ராஜா என்ற கோஸ்ட் ரைடா் ராஜா (19). இவா், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல், முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்த சிலுவையா மகன் பால் ரெக்ஸ் (27), வி.கே.புரத்தைச் சோ்ந்த பால்துரை மகன் ஆரோக்கியராஜ் (24) ஆகியோா் அடிதடி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷுக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com