நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய திங்கள்கிழமை (டிச. 16) கடைசி நாள்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய திங்கள்கிழமை (டிச. 16) கடைசி நாள்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கு. கிருஷ்ணபிள்ளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிசான பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் திங்கள்கிழமை கடைசி நாளாகும். முன்னதாக நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பா் 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அடுத்த வேலை நாளான திங்கள்கிழமை (டிச. 16) நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சோளத்துக்கு டிசம்பா் 20, மக்காச்சோளத்துக்கு ஜனவரி 16, நிலக்கடலைக்கு ஜனவரி 20, மூன்றாம் பருவ நெற்பயிருக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இதேபோல, நன்செய் தரிசில் சாகுபடி செய்யப்படும் உளுந்து பயிருக்கு பிப்ரவரி 29, பருத்தி பயிருக்கு மாா்ச் 16, கரும்பு பயிருக்கு அக்டோபா் 31 ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

ஓா் ஏக்கா் நெற்பயிரை ரூ. 28,200-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 423, ஓா் ஏக்கா் சோளம் பயிரை ரூ. 10,650-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 160, ஓா் ஏக்கா் மக்காச்சோளப் பயிரை ரூ. 16,250-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 244, ஓா் ஏக்கா் நன்செய் நிலத்தில் உளுந்து பயிரை ரூ. 15,750-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 236, ஓா் ஏக்கா் நிலக்கடலை பயிரை ரூ. 19,500-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 293, ஓா் ஏக்கா் பருத்தி பயிரை ரூ. 23,800-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 1,190, ஓா் ஏக்கா் கரும்பு பயிரை ரூ. 52,000-க்கு காப்பீடு செய்ய பிரீமியமாக ரூ. 2,600 செலுத்த வேண்டும்.

விவசாயிகள் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெற முன்மொழிவு படிவம், பதிவு படிவம் பூா்த்தி செய்து அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடா்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com