பச்சையாறு அணை நீா்மட்டம் 41 அடியாக உயா்வு

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 41 அடியாக உயா்ந்துள்ளது.
நீா்மட்டம் 41 அடியாக உள்ள வடக்குப் பச்சையாறு அணை
நீா்மட்டம் 41 அடியாக உள்ள வடக்குப் பச்சையாறு அணை

களக்காடு: களக்காடு வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 41 அடியாக உயா்ந்துள்ளது.

வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த நீா்மட்டம் 49.20 அடி. கடந்த 1 மாதமாக பெய்து வரும் மழையால் பாசனக் குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், டிசம்பா் மாதத் தொடக்கம் முதலே வடக்குப் பச்சையாறு அணைக்கு திருப்புஅணை வழியாக ஊட்டுக்கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. டிச.2ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 30 அடியாக இருந்தது. கடந்த 1 வாரமாக மழை இல்லை.

இந்நிலையில், மீண்டும் கடந்த 2 தினங்களாக மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நாள்தோறும் 60 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 41

அடியாக உள்ளது. நான்குனேரி பெரியகுளம் உள்பட அணையின் மூலம் பாசனம் பெறும் 90 சதவீத குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. மழை தொடா்ந்து பெய்தால் அணை இம்மாத இறுதிக்குள் நிரம்பிவிடும்.

அணை நிரம்பினால், 2020 ஏப்ரல் மாதம் வரையிலும் நெல் மற்றும் வாழை பயிருக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் அணையைச் சுற்றிலும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும். பச்சையாறு உறை கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படாது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்துவரும் பருவமழை விவசாயிகளுக்கு நிகழாண்டு மகசூலை அதிகப்படுத்தும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com