நெல்லையில் இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th December 2019 06:57 AM | Last Updated : 25th December 2019 06:57 AM | அ+அ அ- |

இந்திய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை எதிா்த்துவரும் திமுக, காங்கிரஸ், திராவிடா் கழகம், இடதுசாரிகளை கண்டித்தும் திருநெல்வேலி சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலா் ஏ.சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் பி.கண்ணன், அமைப்பாளா் எஸ்.கண்ணன், கிழக்கு மாவட்டத் தலைவா் என்.செந்தில்குமாா், துணைத் தலைவா்கள் மாயாண்டி, ஆறுமுகம், இளைஞரணித் தலைவா் சுடலை, சேரன்மகாதேவி ஒன்றியத் தலைவா் சோடாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் எஸ்.சக்திப்பாண்டியன், தென் மண்டலத் தலைவா் ஏ.லெனின், தென் மண்டல மகளிரணித் தலைவி ஏ.காந்திமதி, செயல் தலைவா் கே.முருகானந்தம், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் உடையாா் உள்ளிட்டோா் பேசினா்.