சுடச்சுட

  

  தென்காசி அருகே யானைகளால் வாழை, தென்னை, நெற்பயிர்கள் சேதம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென்காசி அருகே மத்தளம்பாறை கென்டி ஊத்து சரகத்திற்குட்பட்ட விவசாய பகுதியில், யானைகள் புகுந்ததில் வாழை, தென்னை, நெற்பயிர்கள் சேதமடைந்தன.
  இதையடுத்து, குற்றாலம் சரக வனத்துறை வனவர் பாண்டியராஜ், வனக் காவலர் வனராஜ், வேட்டை தடுப்புக் காவலர் மாடசாமி, ராஜ், சதாசிவம் ஆகியோர் கொண்ட குழு சேதமடைந்த பகுதியைப் பார்வையிட்டது. இதில், அருணாசலம் என்பவரின் 10 தென்னைமரங்கள், பொன்னையா என்பவரின் ஓர் ஏக்கர் வாழை, 5 தென்னை மரங்கள், இசக்கி என்பவரின் 20 தென்னைகள், வேலாயுதம் என்பவரின் ஓர் ஏக்கர் வாழை, சேதுராமன் என்பவரின் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது தெரியவந்தது.
  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குற்றாலம் வனவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai