சுடச்சுட

  

  மனிதநேய மக்கள் கட்சி ஆண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  மமகவின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி நகரம் கிளை சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் தலைவர் கோல்டன் காஜா தலைமை வகித்தார். தொண்டரணி மாவட்டச் செயலர் கம்புக்கடை ரசூல், தமுமுக நகரச் செயலர் ஷபிக், சம்சுத்தீன், ஷாலி, அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். தமுமுக மாவட்டச் செயலர் அலிப்பிலால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai