சுடச்சுட

  

  பாளையங்கோட்டை மத்திய சிறையில் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
  பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் செல்லிடப்பேசிகள் மற்றும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு முறை போலீஸார் திடீர்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர ஆவணக் காப்பக உதவி ஆணையர் பரமசிவம் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 1.30 மணிநேரம் நீடித்தது. கைதிகள் தங்கியிருக்கும் அறைகள், உணவுக்கூடம், கழிப்பறைகள், சிறை வளாகம் முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். 
  இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இந்த சோதனை வழக்கமான ஒன்றுதான். இன்றைய சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai