சுடச்சுட

  

  திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், புறநகர் அரிமா சங்கம், சிட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியன சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா பேட்டையில் நடைபெற்றது. 
  ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி இயக்குநர் ஜே.நைனா முகம்மது தலைமை வகித்தார். பேட்டை காவல் உதவி ஆய்வாளர் எஸ்.அற்புதானந்தம் முன்னிலை வகித்தார். மதார் முகைதீன் வரவேற்றார்.  திருநெல்வேலி டவுண் குற்றப்பிரிவு உதவி ஆணையர் இ.மெக்லரின் எஸ்கால் கலந்துகொண்டு பேசினார். போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது. 
  வழக்குரைஞர் நிதிஷ் முருகன், ரிஸ்வா சங்க நிர்வாக உறுப்பினர் எம்.முஹம்மது பைசல், எம்.காதர் ஒலி, பக்கீர் மைதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai