சுடச்சுட

  

  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் இ.செல்வசுந்தரி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.பாரதி அண்ணா, மாநிலச் செயலர் சி.வில்சன், மாவட்ட துணைத் தலைவர் பி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்தனர். அந்த மனுவில், மாற்றுத்திறனாளி சரண்யாவுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; பாலியல் தொல்லை புகார் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்ததது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai