சுடச்சுட

  

  பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் 5ஆவது ஆண்டு ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி காலையில் விஸ்வரூபம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து சூரியபிரபை, கருடன், சேஷ வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார். நண்பகலில் சுவாமிக்கு திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி எழுந்தருளினார். 
  பின்னர் அனுமன், அன்ன வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளியும், இரவில் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளியும் வீதியுலா வந்தார். விழாவையொட்டி காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai