சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 15) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் திருநெல்வேலி வட்டம் ராமலிங்கனேரி, ராதாபுரம் வட்டம் கருங்குளம், அம்பாசமுத்திரம் வட்டம் பள்ளக்கால் பொதுக்குடி, நான்குனேரி வட்டம் கூந்தன்குளம், சேரன்மகாதேவி வட்டம்  வடக்குகாருக்குறிச்சி, பாளையங்கோட்டை வட்டம் பாளையங்கோட்டை பகுதி-1,  சங்கரன்கோவில் வட்டம் வன்னிக்கோனேந்தல் நரிக்குடி, திருவேங்கடம் வட்டம் பழங்கோட்டை களப்பாளன்குளம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமின்போது, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, குடிநீர், சாலைவசதி தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai