அஞ்சல்தலைகள் சேகரிப்பு கருத்தரங்கு

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல்தலைகள் சேகரிப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில்

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல்தலைகள் சேகரிப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கு திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வேதராஜன் வரவேற்றார். முதுநிலை அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் தொடங்கிவைத்தார். மாவட்ட அறிவியல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.குமார் சிறப்புரையாற்றினார். அஞ்சல் தலைகள் சேகரிப்பாளர் ஜெபராஜ் மைக்கேல் பேசுகையில், மாணவர் பருவத்திலேயே அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு, நிகழ்கால முக்கிய நினைவுகள், பாரம்பரிய விழாக்கள், தேச தலைவர்கள் ஆகியோரின் அஞ்சல்தலைகளை சேகரித்து வைப்பது எதிர்கால சந்ததிக்கு பேருதவியாக இருக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் அஞ்சல்தலை சேகரிப்பாளர்களிடம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பும் உள்ளது என்றார்.
கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அஞ்சல் துறை மக்கள் தொடர்பு அலுவலர் கனகசபாபதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com