வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகள்: விரைந்து தொடங்க விவசாயிகள் கோரிக்கை

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவேண்டும் என எம்.எல்.தேரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவேண்டும் என எம்.எல்.தேரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி. சுதாகர் பாலாஜி நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் அரசூர் மற்றும் எம்.எல்.தேரி பகுதிகளின் வறட்சியை தடுத்து, குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக தாமிரவருணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு ஆகியவற்றை இணைத்து ஏற்படுத்தப்பட்ட எம்.எல்.தேரி வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகள் கடந்த 2009-ல் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.
இதனால், திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இத்திட்டம் அமலில் இருப்பதால், மணிமுத்தாறு அணை நான்காவது ரீச்சின் பத்தாவது மடை மூலம் திசையன்விளை சுற்றுவட்டாரம் மற்றும் அரசூர் கடைமடை குளங்களுக்கு கிடைக்க வேண்டிய மணிமுத்தாறு தண்ணீர் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2017 முதல் வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனினும், மூன்றாவது கட்டப் பணிகள் இதுவரை தொடங்கப்படாதது, திசையன்விளை அரசூர் பகுதி மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம்  அளிக்கிறது.
எனவே, இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, அரசுக்கே திரும்பிச் செல்லாமல் இருக்க, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 300 கோடிக்கான வேலைகள் மற்றும் மூன்றாவது கட்டப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com