பாளை. கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
By DIN | Published On : 20th February 2019 06:05 AM | Last Updated : 20th February 2019 06:05 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் துறை சார்பில் "பொருநைப் பதிவுகளும், பன்முக எழுத்தாளுமைகளும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தமிழ்த் துறை தலைவர் இரா.பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். கல்லூரி அதிபர் வி.ஹென்றி ஜெரோம் ஆசியுரை வழங்கினார். கல்லூரிச் செயலர் அ.அந்தோணிசாமி வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர் வி.பிரிட்டோ தலைமை உரையாற்றினார். கவிஞர் கலாப்பிரியா சிறப்புரையாற்றினார்.
முதல் அமர்வில் பேராசிரியர் ஆ.இருதயராஜ், இரண்டாம் அமர்வில் பேராசிரியர் ச.கந்தன் ஆகியோர் அறிமுகவுரையாற்றினர். கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பொ.செ.பாண்டியன், அருளானந்தர் கல்லூரி உதவிப் பேராசிரியர் ம.அன்பரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
கருத்தரங்கு நிறைவில் பேராசிரியர் சு.ரவி சேசுராஜ் வரவேற்றார். தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் து.தாமஸ் அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் நெல்லை கவிநேசன், இளம் படைப்பாளர் ஆதிலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கச் செயலர் மி.கவிதா நன்றி கூறினார். உதவிப் பேராசிரியர்கள் ஜே.அந்தோணி சகாய சோபியா, இரா.அந்தோணிராஜ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.