முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
இடைகாலில் காந்தி கிராம கதர் உற்பத்திக் கூடம் திறப்பு
By DIN | Published On : 28th February 2019 11:01 AM | Last Updated : 28th February 2019 11:01 AM | அ+அ அ- |

திண்டுக்கல் காந்தி கிராம அறக்கட்டளையின் ஒரு அங்கமான கதர் அறக்கட்டளை சார்பில் அம்பாசமுத்திரம் அருகே இடைகாலில் கதர் உற்பத்திக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
காந்தியடிகனின் 150 ஆவது பிறந்ததினத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி மையக் கட்டடத்தை கதர் வாரிய தலைமைச் செயல் அலுவலர் சத்தியநாராயணன் திறந்தார். அறக்கட்டளை நிறுவனர் செளந்திரம் படத்தை செயலர் கே.சிவக்குமார் திறந்தார். ரெடிங்க்டன் பவுன்டேசன் நிர்வாக அறங்காவலர் முத்துக்குமாரசாமி வாழ்த்திப் பேசினார். கதர் உற்பத்தியில் நீண்ட காலம் பணிபுரியும் பணியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். காந்திகிராம லட்சுமி சேவா சங்க மருத்துவர் பாசமணிகண்டன் தலைமையில் கதர் நூற்பு மற்றும் நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு இலவச சித்த ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
கதர் அறக்கட்டளை உற்பத்திப் பிரிவுத் தலைவர் ரேவதி, ஒளவை ஆசிரமத் துணைத் தாளாளர் பாலமுருகன், சாந்தி பள்ளித் தலைமை ஆசிரியர் வி. சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். உற்பத்தி மேலாளர் சுப்பையா நன்றி கூறினார். ஏற்கெனவே, காந்தி கிராம அறக்கட்டளை மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பிரம்மதேசம், இடைகால், கீழப்பாவூர், சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் கதர் உற்பத்தி நடைபெற்று வருகின்றது.