முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு ஆள் தேர்வு: 210 பேர் பங்கேற்பு
By DIN | Published On : 28th February 2019 11:04 AM | Last Updated : 28th February 2019 11:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட சமூகநலத் துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையப் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற ஆள்கள் தேர்வில் 210 பேர் பங்கேற்றனர்.
வி.எம்.சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு நிர்வாக அலுவலர், ஒரு முதுநிலை கவுன்சிலர், 2 வழக்குப் பணியாளர்கள், ஒரு தொழில்நுட்பப் பணியாளர், ஒரு பல்நோக்கு உதவியாளர், இரவுக் காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆள்கள் தேர்வு முகாம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் சரஸ்வதி முன்னிலையில் சமூகப் பாதுகாப்புத் துறை தனித்துணை ஆட்சியர் மாறன், மருத்துவர் பாரதி, மாவட்ட பாதுகாப்பு அலுவலர் வேலுமணி உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் ஆள்களைத் தேர்வு செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 210 பேர் பங்கேற்றனர். இப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.