முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சுரண்டையில் அமமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 11:00 AM | Last Updated : 28th February 2019 11:00 AM | அ+அ அ- |

சுரண்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்ததின பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் வி. முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன், மாவட்ட துணைச் செயலர் வி.பி.மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலர் வி. வீரபுத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரத்தினசபாபதி, அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவர்களுக்கு பரிசுகள், நலிந்தோருக்கு நல உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
கட்சியின் இலக்கிய அணிச் செயலர் ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட நிர்வாகிகள் சுமதி, பிச்சம்மாள், பூசைத்துரை, கண்ணன், குமரேசன், ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், முருகேசன், செந்தூர்பாண்டியன், கொம்பையா பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர். நகரச் செயலர் பால்ராஜ் வரவேற்றார். ஒன்றிய இணைச்செயலர் பாலமுருகன் நன்றி கூறினார்.