சுடச்சுட

  

  தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.  மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும்.  வீட்டு வாடகைப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
  ஆர்ப்பாட்டத்துக்கு  மாநில துணை அமைப்பாளர் முருகன் தலைமை வகித்தார்.  மாநில துணை அமைப்பாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.  மாநில துணை அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார்.  கோரிக்கைகளை விளக்கி மாநில துணை அமைப்பாளர் சுப்புலட்சுமி, மாநில அமைப்பாளர் ஆறுமுகம், பல்வேறு சங்க நிர்வாகிகள் முத்து முகம்மது, கண.முருகனாந்தம், மீனாட்சி சுந்தரம், வானுவாமலை, இதயதுல்லா உள்பட பலர் பேசினர். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றியும்,  பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai