சுடச்சுட

  

  தேசிய விளையாட்டுப் போட்டி:  கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி சிறப்பிடம்

  By DIN  |   Published on : 12th January 2019 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி வித்யா சிறப்பிடம் பெற்றார். 
  அனைத்திந்திய வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் லூதியானாவில் அண்மையில் நடைபெற்றது.   இப் போட்டியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் நான்காமாண்டு மாணவி வித்யா பங்கேற்றார்.  
  நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வித்யா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  சிறப்பிடம் பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர் ஜெ.ஜாண்சன் ராஜேஸ்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai