சுடச்சுட

  

  செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

  By DIN  |   Published on : 13th January 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாளையங்கோட்டையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  மாவட்ட சேர்மன் எம்.சார்லஸ் தலைமை வகித்தார். சர்வதேச மத சுதந்திர கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் பி.டி.சிதம்பரம், அருட்தந்தை அந்தோணி குரூஸ் அடிகளார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா கலந்துகொண்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழர்களின் மரபு சார்ந்த பாரம்பரியமான பொருள்களான ரேக்ளா மாட்டு வண்டி, ஏர் உழும் கலப்பை, கலைத்திறன் மிக்க பழங்கால நகைப் பெட்டகம், வீர விளையாட்டுகளை பறைசாற்றும் குறுவாள், கலைத்திறன் மிக்க வாள், வேல்கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள், இளவட்டக் கல், அரிக்கேன் விளக்கு உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை பார்வையிட்டவர்களுக்கு அங்கிருந்த பொருள்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. மேலும், இளவட்டக் கல் மற்றும் சிலம்பாட்ட கலைகள் குறித்து செயல்முறை மூலம் செய்து காட்டினர்.
  நெகிழி இல்லாத வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் அனைவருக்கும் வாழை இலை மற்றும் பாக்கு மரத் தட்டுகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. செயின்ட் ஆன்ஸ் நல்வாழ்வு மையத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு வேட்டிகள், சேலைகள், லூங்கி, நைட்டி ஆகியவை வழங்கப்பட்டது. இதுதவிர ஏழை மக்கள் 100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்திரங்கள், அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai