சுடச்சுட

  

  தியாகராஜ நகர் விக்ன விநாயகர்கோயிலில் ஜன.17இல் வருஷாபிஷேகம்

  By DIN  |   Published on : 13th January 2019 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் 30-ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் தேர் திருவிழா ஜன. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
  அன்றைய தினம் காலை 8 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹுதி, 10.35 மணிக்கு கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.மாலை 6.15 மணிக்கு இருபத்து ஏழாவது முறையாக உற்சவ விநாயகமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி 7-ஆவது மற்றும் 8-ஆவது வடக்கு தெருக்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விக்ன விநாயகர் ஆலய வழிபாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai