சுடச்சுட

  


  பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் கமாலுதீன், சத்யானந்த் ஆகியோர் மாணவர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கினர். 
  ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்கள் பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கலிட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர் ஜே.கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால், இயக்குநர் ஐ.ரவிக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
  இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில்...பொங்கல் விழாவுக்கு பள்ளியின் தாளாளர் பிடலிஸ் தலைமை வகித்தார். அன்னை ரூபி, தலைமை ஆசிரியை நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லூர்து செல்வி வரவேற்றார். கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியை அமலி புஷ்பம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். விழாவில், பள்ளி மாணவிகளின் தமிழரின் வாழ்வியலோடு இணைந்த பாரம்பரிய விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவை பாடப்பட்டன. மாணவிகளின் பரத நாட்டியம், கிராமிய நடனம், பறையாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பூங்குமாரி நன்றி கூறினார். 
  வி.கே.நர்சரி பள்ளியில்... திருநெல்வேலி நகரத்தில் உள்ள வி.கே.நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் கே.முத்துகுமார் தலைமை வகித்தார். செயலர் ஆர்.சின்னதம்பி, பொருளாளர் எம்.தளவாய் மாடசாமி, உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai