சுடச்சுட

  

  பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த தினமானது இளைஞர்கள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. 
  இந்த விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் சத்யானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் எம். மலர்விழி அறிமுகவுரையாற்றினார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி வி.ருக்குமணி வரவேற்றார். 
  தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஆலோகர் விஷ்ணுகாந்த் எஸ்.சத்பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்கள்தின விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: ஒவ்வொரு மாணவியரும் குறிக்கோளுடன் கனவு காணவேண்டும். தேசியம், ஆன்மிகம், நாட்டுப்பற்று என அனைத்திலும் சிறந்த விவேகானந்தர் வழி நின்று தங்களின் குறிக்கோள் வெற்றி அடைய உழைக்க வேண்டும் என்றார்.
  விழாவில் மாணவிகளின் பன்முகத் திறமையை வெளிக்கொணரும் வகையில் விவேகானந்தர் குறித்த விவேகா -2018 என்ற தலைப்பில் ஒப்பித்தல், பேச்சு, கவிதை, பென்சில் ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகள் சிறப்பிக்கப்பட்டனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai