நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. 


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஜன.15) பிற்பகலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடலும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. 
திங்கள்கிழமை (ஜன.21) பகல் 12.30 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரவருணி அம்பாள், குங்குலிய கலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு, கைலாசபுரம் வழியாக திருநெல்வேலி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீர்த்தவாரி முடிந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு சுவாமி, மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, கோயிலை வந்தடைகிறார். செவ்வாய்க்கிழமை (ஜன.22) செளந்திர சபை மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. புதன்கிழமை (ஜன. 23) சுவாமி நெல்லையப்பர் வெளித் தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com