திருவள்ளுவர் தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட தமிழ் நலக் கழகம் சார்பில் 19 ஆவது ஆண்டாக வள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி,  திருநெல்வேலி நகரம் வாகையடி சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைப்பின் செயலர் பாப்பாக்குடி இரா. செல்வமணி, மாவட்டத் தலைவர் முரசொலி முருகன் ஆகியோர் தலைமையில் பொருளாளர் திருமாவளவன், துணைத் தலைவர் விசாலம் முருகன், அ.செ.அற்புதானந்தம், கவிஞர்கள் ம.சக்திவேலாயுதம், ப.தாணப்பன், செ.ச.பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; தனியார் பேருந்துகளிலும் திருக்குறள் எழுத வேண்டும்; வணிகப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திமுக: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப் தலைமையில் சட்டப்பேரவை  உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், நிர்வாகிகள் சங்கர், எஸ்.வி.சுரேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் பகுதிச்செயலர் உலகநாதன், ஷாஜகான் உள்பட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில், பகுதி செயலர் கோபி என்ற நமச்சிவாயம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com