நெல்லை அறிவியல் மையத்துக்கு ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் வருகை

காணும் பொங்கலையொட்டி திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தை புதன்கிழமை  6 ஆயிரம் பார்வையிட்டனர்.

காணும் பொங்கலையொட்டி திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தை புதன்கிழமை  6 ஆயிரம் பார்வையிட்டனர்.
காணும் பொங்கல், மாட்டுப்பொங்கல் ஆகியவை ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி அருவிகள், நீர்நிலைகள், சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்துக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அங்குள்ள 3 டி அரங்கம், கோளரங்கம், அறிவியல் சாதனங்களைப் பார்வையிட்ட பொதுமக்கள், குழந்தைகளுடன் உணவருந்தி மகிழ்ந்தனர். மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை கழகம், திருநெல்வேலி மாநகர ரஜினி மக்கள் மன்றம், திருநெல்வேலி வீடியோ மற்றும் போட்டோ கிராபர் அசோசியேஷன் ஆகியவை சார்பில் பொதுமக்களுக்கான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ். முத்துகுமார் தலைமை வகித்தார். அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரிலெனின் முன்னிலை வகித்தார்.  விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கூடி வாழுதல் குறித்து "பறவையின் குரல்' என்ற தலைப்பில் இருப்பிடத்தை தொலைத்த காக்கா தன்னுடைய கதையை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறு நாடகத்தில் பிளாஸ்டிக் பொருள்களால் குரங்கு ஒன்று உயிரிழக்கும் நிகழ்வை நடித்துக் காட்டினர். குறுநாடகத்தை அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கணபதி, மதியழகன் ஆகியோர் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழாண்டும் அறிவியல் மையத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள், முதியவர்கள் உள்பட சுமார் 6  ஆயிரம் பேர் ஒரே நாளில் வருகை தந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன என்று அறிவியல் மைய அலுவலர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com