மேலப்பாளையத்தில் பிஎஃப்ஐ சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு-பொதுக்கூட்டம்
By DIN | Published On : 01st July 2019 07:28 AM | Last Updated : 01st July 2019 07:28 AM | அ+அ அ- |

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சார்பில், ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒற்றுமை அணிவகுப்பை ஜின்னா திடலில் இருந்து மாநில பொதுச் செயலர் அ. காலித் முகம்மது தொடங்கிவைத்தார். இந்த அணிவகுப்பு, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலை அடைந்ததும், பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் அ. முகைதீன் அப்துல் காதர் வரவேற்றார். பிஎஃப்ஐ தேசிய பொதுச் செயலர் மு. முகம்மது அலி ஜின்னா, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் தலைவர் ஒ.முகம்மது அலி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.