சுடச்சுட

  

  அம்பாசமுத்திரத்தில் வன்னியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்ட வன்னியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது.
  இக்கூட்டத்துக்கு,  மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். 
  கூட்டத்தில், 2019-2020ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்துவது,  காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு மருத்துவர் ராமதாஸிடம் திருநெல்வேலி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் நிதி திரட்டி கொடுப்பது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  திருச்செந்தூர் வன்னியர் விடுதி தலைவர் சண்முகவேல், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் பரமசிவன்,  மணி, இசக்கியப்பா,  வேலுச்சாமி,  கிருபாகரன்,  மணிகண்டன் , பழனி,  சங்கர்,  ரவி, சுப்பிரமணியன், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  
  கூட்டத்தில் புதிய மாவட்டத் தலைவராக ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் செல்லப்பா, செயலராக இசக்கி,  பொருளாளராக சேகர், துணைத் தலைவர்களாக சங்கரநாராயணன், வேலுச்சாமி, செண்பகராஜ், துணைச் செயலராக புதிய முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்டச் செயலர் இசக்கி வரவேற்றார். முன்னாள் மாவட்டப் பொருளாளர் திருமலைக்குமாரசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai