சுடச்சுட

  

  இயற்கை மருத்துவம்-யோகா அறிவியல் படிப்புக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

  By DIN  |   Published on : 02nd July 2019 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து இம்மாதம் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
  தமிழகத்தில் சித்த மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெறும் எனவும், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புகளுக்கான (B.​N.​Y.​S.) மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி முதல்வர் (பொ) விக்டோரியா தொடங்கிவைத்தார்.
  இதுகுறித்து கல்லூரி வட்டாரங்கள் கூறுகையில், இக் கல்லூரியில் இம் மாதம் 19 ஆம் தேதி வரை (விடுமுறை நாள்களைத் தவிர்த்து) தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். முதல்கட்டமாக 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை தீர்ந்தால் உடனடியாக பெற்றுக் கொடுக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் இலவசமாக விண்ணப்பங்களைப் பெறலாம். அதற்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், இலவசமாக விண்ணப்பம் கேட்கும் மனு, சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
  இதர வகுப்பினர் ரூ.500-க்கான வரைவோலை எடுக்க வேண்டும். வரைவோலையை D‌i‌r‌e​c‌t‌o‌r O‌f I‌n‌d‌i​a‌n M‌e‌d‌i​c‌i‌n‌e a‌n‌d H‌o‌m‌‌e‌o‌p​a‌t‌h‌y, C‌h‌e‌n‌n​a‌i-106 என்ற முகவரிக்கு எடுக்க வேண்டும். இப் படிப்புகள் உள்ள கல்லூரி விவரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்துடன் உள்ள கையேடுகளில் அச்சிடப்பட்டுள்ளன என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai